நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #KamalRasigarMandram
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்- நடிகர் கமல்ஹாசன்
Published on

சென்னை,

இன்று கமல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அவர் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது சுற்றுப்பயண ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். பிப்ரவரி 10-ந் தேதி கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக அங்கு செல்கிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கமலின் சுற்றுப்பயண விவரம் முழுமையாக

அறிவிக்கப்படுகிறது.

காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது. அந்த ஆலோசனையின் முடிவில், தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக, மதுரை மாவட்ட நற்பணி மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள்; இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் என கூறினார்.

பிப்., 24-ல் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வந்த செய்தி தவறானது. 21, 22 மற்றும் 23-ம் தேதிகளில் சுற்றுபயணம் மட்டுமே மேற்கொள்கிறேன். பொதுக்கூட்டம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

நற்பணி இயக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நேரம், கடமை வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

#KamalHaasan | #KamalRasigarMandram | #KamalhaasanPoliticalEntry | #KamalFans

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com