''தக் லைப்'' பட தோல்வி - மன்னிப்பு கேட்ட மணிரத்னம்?

''தக் லைப்'' படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
சென்னை,
''தக் லைப்'' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குனர் மணிரத்னம் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான பான் இந்தியா அதிரடி திரைப்படமான ''தக் லைப்'', இந்த மாத தொடக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
நாயகன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம்-கமல் மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் மற்றொரு கிளாசிக் படத்தை எதிர்பார்த்தனர். இருப்பினும், ''தக் லைப்'' படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், ''தக் லைப்'' படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னம் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில்,
"ரசிகர்கள் ''நாயகன்'' படத்தைப்போன்று எதிர்பார்த்ததால் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் இருவரிடமிருந்தும் இன்னொரு நாயகனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன்'' என்றார்.






