

சென்னை,
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில்,
கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை, ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம். மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன். ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்னச்சத்திரமா இருந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும். கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.