டிரெய்லரை நீக்கிவிட்டோம்...கேவிஎன் பட தயாரிப்பு நிறுவனம் பதிவு

கேவிஎன் தயாரித்துள்ள இன்னொரு படத்துக்கும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.


டிரெய்லரை நீக்கிவிட்டோம்...கேவிஎன் பட தயாரிப்பு நிறுவனம் பதிவு
Published on

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனமாக கேவிஎன் உள்ளது. கன்னடம் மட்டுமல்லாது தமிழில் விஜயின் `ஜனநாயகன்', இந்தியில் சைப் அலிகான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் நடிக்கும் `ஹைவான்', மலையாளத்தில் சிதம்பரம் இயக்கியுள்ள ` பாலன் தி பாய் ', தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் `மெகா 158' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. சமீப காலமாக பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

அதாவது கேவிஎன் தயாரித்துள்ள இன்னொரு படத்துக்கும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னட படம் 'கேடி தி டெவில்'. இப்படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று இரவு அப்படத்தின் டிரெய்லரை யூட்யூபிலிருந்து நீக்கியுள்ளது கேவிஎன் நிறுவனம்.

இது குறித்து அந்த நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்ட 'KD: The Devil' திரைப்படத்தின் டிரெய்லரில், கவனக்குறைவாக சில சான்றளிக்கப்படாத உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தன; எனவே, நாங்கள் அந்த டிரெய்லரை நீக்கிவிட்டோம், மேலும் சான்றிதழ் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம்; இந்தக் கவனக்குறைவுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம், மேலும் அனைத்து சான்றிதழ் விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளோம்"என்று பதிவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com