திருமண வதந்தி நடிகர் விஷால்-அனிஷா சமரசம்?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஷாலுக்கும், ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமண வதந்தி நடிகர் விஷால்-அனிஷா சமரசம்?
Published on

அனிஷா பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடத்தில் தனது திருமணம் நடக்கும் என்று விஷால் கூறிவந்தார். இந்த நிலையில் விஷால்-அனிஷா திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டதாக தெலுங்கு இணையதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண நிச்சயதார்த்த படங்கள் அனைத்தையும் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென்று நீக்கிவிட்டார்.

இதை வைத்து திருமணம் நின்று போனதாக தகவல்கள் பரவின. இதனை இருவருமே மறுக்கவில்லை. திருமணம் நின்று போனதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று விஷாலுக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். இந்த நிலையில் விஷால் பிறந்த நாளையொட்டி அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டார். நீங்கள் பிரகாசிப்பதற்காக பிறந்தவர். உங்களை என்றுமே நான் போற்றுவேன். நம்பிக்கையுடன் இருங்கள். என்று கூறியுள்ளார். அத்துடன் விஷாலுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு உள்ளது என்றும் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என்றும் தெலுங்கு இணையதளங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com