திருமண டிரைலர்...! கணவரின் முதல் திருமண சர்ச்சை...! யாரோட கடந்த காலத்தையும் பேசக் கூடாது - ஹன்சிகா கண்ணீர்...!

திருமணத்தின்போது ஹன்சிகா பதட்டமாகி அழுததை பார்த்த ரசிகர்களோ, அந்த நேரத்தில் இதெல்லாம் சகஜம் தான் ஹன்சுமா என தெரிவித்துள்ளனர்.
திருமண டிரைலர்...! கணவரின் முதல் திருமண சர்ச்சை...! யாரோட கடந்த காலத்தையும் பேசக் கூடாது - ஹன்சிகா கண்ணீர்...!
Published on

சென்னை

ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னரும், காதலருமான சொஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தை வீடியோ எடுத்து டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு கொடுத்துவிட்டார்கள். அந்த வீடியோவின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவின் திருமணம் லைவாக ஒளிபரப்பாகும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நடிகைகள் தங்கள் திருமண வீடியோவை ஓடிடி தளத்திடம் கொடுப்பது ஒன்றும் புதிது இல்லை. நயன்தாரா கூட இயக்குநர் கவுதம் மேனனை வைத்து தன் திருமணத்தை ஷூட் செய்து அதை நெட்பிளிக்ஸிடம் பெரிய தொகைக்கு கொடுத்துவிட்டார்.

ஹன்சிகா, சொஹைல் திருமண வீடியோவுக்கு கவுதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததை கேட்ட ரசிகர்களோ, நீங்கள் நயன்தாரா திருமணத்தை தான் இயக்கினீர்கள் என தெரிவித்துள்ளனர். திருமணத்தின்போது டென்ஷனாகி சொஹைலிடம் பேசியதுடன், அழவும் செய்திருக்கிறார் ஹன்சிகா. மேலும் யாருடைய கடந்த காலத்தையும் பார்க்கக் கூடாது என்று நீங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் என தன் தாயிடம் கூறியிருக்கிறார்.

திருமணத்தின்போது ஹன்சிகா பதட்டமாகி அழுததை பார்த்த ரசிகர்களோ, அந்த நேரத்தில் இதெல்லாம் சகஜம் தான் ஹன்சுமா என தெரிவித்துள்ளனர்.

பாரீஸில் வைத்து ஹன்சிகாவிடம் காதலை சொன்னார் சொஹைல். இதையடுத்து ஹன்சிகா சொஹைலை அறிமுகம் செய்து வைத்ததுமே அவரின் முதல் திருமணம் குறித்த தகவல் வெளியானது. சொஹைலுக்கும், ரிங்கி என்பவருக்கும் கோவாவில் நடந்த திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியானது.

ஹன்சிகாவின் தோழி தான் அந்த ரிங்கி என கூறப்பட்டது. இதையடுத்து நெருங்கிய தோழியின் கணவரை திருடிய ஹன்சிகா என சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். அதுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தான் அமைந்துள்ளது இந்த திருமண டிரைலர். திருமண வீடியோவுக்கு லவ் ஷாதி டிராமா என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

நயன்தாராவின் திருமண வீடியோ தான் முதலில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ஹன்சிகா முந்திக் கொண்டார்.

நயன்தாரவின் திருமண வீடியோ வேலை இன்னும் முடியவில்லையாம். விக்னேஷ் சிவன் அந்த வீடியோவை ஷூட் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் தான் திருமண வீடியோ வெளியாவதில் தாமதமாகியிருக்கிறதாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com