'வெனஸ்டே' சீசன் 2: ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்


Wednesday Season 2: When will it be released? - Information released
x

ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காமெடி, திரில்லர் வகை தொடர் ‘வெனஸ்டே’

சென்னை,

அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார்.

மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது.

இதையடுத்து, இதன் 2-வது சீசன் உருவாகி வருகிறது. இந்நிலையில், இதன் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி இந்த தொடர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


1 More update

Next Story