வைரலாகும் புகைப்படம் சைக்கிளில் சென்ற நடிகர் அஜித்குமார்

அஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் முடித்து மே 1-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
வைரலாகும் புகைப்படம் சைக்கிளில் சென்ற நடிகர் அஜித்குமார்
Published on

ரசிகர்கள் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்களிடம் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வந்ததால் அஜித்குமார் அதிருப்தியாகி பொது வெளியிலும், சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் வலிமை படத்தின் முதல் தோற்ற போஸ்டர் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அது வெளியிடப்படும் என்றார். சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் அஜித் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் அஜித்குமார் சைக்கிளில் பயணம் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தல சைக்கிளிங் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com