சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜாக்குலின்

சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜாக்குலின்
Published on

அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களை ஏமாற்றியும், பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி உள்ளார். இதுவரை ரூ.200 கோடி மோசடி செய்து இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகருடன் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்பில் இருந்ததாக புகார்கள் எழுந்தன. இதனை மறுத்த ஜாக்குலின் சுகேஷ் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் கடந்த ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து ஜாக்குலினிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com