''மமீதா பைஜு''வின் லைன் அப்பில் இருக்கும் மாஸ் படங்கள்!


What are Mamitha Baijus upcoming movies?
x
தினத்தந்தி 9 July 2025 7:11 AM IST (Updated: 9 July 2025 7:13 AM IST)
t-max-icont-min-icon

விஜய்யின் ''ஜனநாயகன்'' முதல் சூர்யாவின் ''சூர்யா 46'' வரை பல படங்கள் ''மமீதா பைஜு''வின் கைவசம் உள்ளன.

சென்னை,

'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மலையாள நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அவரது மயக்கும் நடிப்பு மற்றும் மறுக்க முடியாத திறமையால், தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் அவர்களது படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அதன்படி, விஜய்யின் ''ஜனநாயகன்'' முதல் சூர்யாவின் ''சூர்யா 46'' வரை பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. தற்போது அவரது லைன் அப்பில் உள்ள படங்களை காண்போம்.

"ஜன நாயகன்": விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரில்லர், படத்தில் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

"சூர்யா 46": வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

''டியூட்'': பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு இப்படத்தில் நடித்து வருகிறார்.

"பெத்லஹேம் குடும்ப யூனிட்": பிரேமலு இயக்குனர் இயக்கும் இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வருகிறார்.

"இரண்டு வானம்": இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா நடித்து வருகிறார்.

"பிரேமலு 2": மமிதாவின் சூப்பர் ஹிட் திரைப்படமான "பிரேமலு" வின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படமும் அவரது கைவசம் உள்ளது. இப்படம் தற்போது முன் தயாரிப்பில் உள்ளது.

''மமிதா பைஜு/சங்கீத் பிரதாப் படம்": "பிரேமலு" திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த சங்கீத் பிரதாப்புக்கு ஜோடியாக இப்படத்தில் மமிதா பைஜு நடிக்கிறார்.

1 More update

Next Story