நிவேதா தாமசுக்கு என்ன ஆச்சு?

ரசிகர்களால் ‘கியூட்'டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தாமஸ், தற்போது முன்பு இருந்ததை விட 2 மடங்கு உடல் எடை கூடியிருக்கிறார்.
நிவேதா தாமசுக்கு என்ன ஆச்சு?
Published on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உருவெடுத்தவர்களில் நிவேதா தாமசும் ஒருவர். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

சென்னையில் பிறந்து இருந்தாலும் தமிழை விட தெலுங்கு படங்களில்தான் நிவேதா தாமஸ் அதிகமாக நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் அவரது நடிப்பில் 'சாகினி தாகினி' படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்களால் 'கியூட்'டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தாமஸ், தற்போது ஆளே மாறி போயிருக்கிறார். முன்பு இருந்ததை விட 2 மடங்கு உடல் எடை கூடியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குண்டாகி போன அவரை பார்த்து, 'அட நம்ம நிவேதா தாமசா இது?' என்று பெருமூச்சு விடுகிறார்கள்.

ஒருவேளை ஏதாவது புதிய படத்துக்காக உடல் எடை கூடியிருக்கிறாரா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிவேதா தாமஸ் எதற்காக இப்படி குண்டாக மாறி போயிருக்கிறார்? என்பது குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com