‘தாராள பிரபு’ நடிகைக்கு என்னாச்சு?.. ஆளே மாறிப்போன தன்யா ஹோப்

சில ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த தான்யா ஹோப், சமீபத்தில் வெளியான ‘நிறம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் கவனம் பெற்றார்.

‘தாராள பிரபு’ நடிகைக்கு என்னாச்சு?.. ஆளே மாறிப்போன தன்யா ஹோப்
Published on: 

சென்னை,

தான்யா ஹோப்பின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுவரை சற்று குண்டான தோற்றத்தில் காணப்பட்ட அவர், தற்போது உடல் எடையை வெகுவாகக் குறைத்து மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகை

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், நடனத்திலும் கவனம் பெற்றவர் தான்யா ஹோப். ‘தடம்’, ‘தாராள பிரபு’, ‘கிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். குறிப்பாக ‘தாராள பிரபு’ படத்தில் இடம்பெற்ற பாடலில் தான்யா ஹோப்பின் நடன அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகின.

சில ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த தான்யா ஹோப், சமீபத்தில் வெளியான ‘நிறம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் கவனம் பெற்றார். தற்போது ‘கோல்மால்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

வெகுவாக குறைந்த உடல் எடை

இந்த நிலையில், தான்யா ஹோப்பின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுவரை சற்று குண்டான தோற்றத்தில் காணப்பட்ட அவர், தற்போது உடல் எடையை வெகுவாகக் குறைத்து மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் அவரது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் கருத்து

தான்யா ஹோப்பின் புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லதுதான் என்றாலும், இவ்வளவு மெலிந்து போக வேண்டுமா? என்றும் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தான்யா ஹோப்பின் இந்த திடீர் தோற்ற மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com