வடிவுக்கரசிக்கு என்னாச்சு?... பரவிய வதந்திகளுக்கு அவரே கொடுத்த விளக்கம்

வடிவுக்கரசி உடல்நிலை குறித்து சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வடிவுக்கரசிக்கு என்னாச்சு?... பரவிய வதந்திகளுக்கு அவரே கொடுத்த விளக்கம்
Published on

சென்னை,

" எனக்கு ஏகப்பட்ட தம்பிகள், நண்பர்கள், ரசிகர்கள் ஆதரவு இருக்கும்போது எனக்கு என்ன நடக்கப்போகுது. நான் நல்லா இருக்கிறேன். படத்தில் நடிக்க தயாராகிட்டு இருக்கிறேன்" என வதந்திகளுக்கு வடிவுக்கரசி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை வடிவுக்கரசி

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த "சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு 'என்ட்ரி' கொடுத்தவர் வடிவுக்கரசி. ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

குறிப்பாக வில்லி வேடங்களிலும் அசத்தியுள்ளார். 'முதல் மரியாதை', 'அருணாச்சலம்' படங் களை உதாரணமாக சொல்லலாம். வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் அசத்தி வரும் வடிவுக்கரசி, பலருக்கும் குரல் கொடுக்கும் 'டப்பிங்' கலைஞராகவும் திகழ்கிறார். சமீபத்தில் வெளியான கான் சிட்டி படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நல்லா இருக்கிறேன்...

இதற்கிடையில் வடிவுக்கரசி உடல்நிலை குறித்து சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வதந்திகளுக்கு வடிவுக்கரசி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்து ஆடியோ பதிவில் " எனக்கு ஏகப்பட்ட தம்பிகள், நண்பர்கள், ரசிகர்கள் ஆதரவு இருக்கும்போது எனக்கு என்ன நடக்கப்போகுது. நான் நல்லா இருக்கிறேன். காலையில் கமல் சார் பேசி விசாரித்தபோது நான் கொஞ்சம் பயந்தேன். நான் இப்ப சினிமா, சீரியலில் பிஸியாக இருக்கிறேன். அடுத்து பிரபு, சுகன்யா நடிக்கும் படத்தில் நடிக்க காரைக்குடிக்கு போக தயாராகிட்டு இருக்கிறேன். அதில் பிரபுவின் அம்மாவாக நடிக்கிறேன். சமீபத்தில் கார்த்திக்கை தீபம் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தேன். எனக்கு இவ்வளவு போன் வருகிறது, என்னை பற்றி ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார்கள். எனக்காக இத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com