'துரோகமும் துரோகியும் புதுசா என்ன?' - சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் டிரைலர் வெளியானது..!

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
'துரோகமும் துரோகியும் புதுசா என்ன?' - சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

சென்னை,

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது.

இந்த படத்தின் டிரைலர் இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி 'பத்து தல' திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com