பங்களாவில் பதுங்கி இருந்த வாலிபர்கள்... அதிர்ச்சி அடைந்த நடிகர் ஷாருக் கான்; பின்னணி என்ன?

நடிகர் ஷாருக் கானின் பங்களாவில் நுழைந்து மேக்-அப் அறையில் 8 மணிநேரம் பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பங்களாவில் பதுங்கி இருந்த வாலிபர்கள்... அதிர்ச்சி அடைந்த நடிகர் ஷாருக் கான்; பின்னணி என்ன?
Published on

புனே,

நடிகர் ஷாருக் கானின் மன்னத் என்ற பெயரிடப்பட்ட பங்களாவின் 3-வது தளத்தில் அவரது மேக்-அப் (ஒப்பனை) அறை உள்ளது. இந்த அறைக்குள் புகுந்த வாலிபர்கள் 2 பேர் மறைவாக பதுங்கி இருந்து உள்ளனர்.

வெளிப்புற சுவர் வழியே ஏறி பங்களாவுக்குள் குதித்து உள்ளே நுழைந்து உள்ளனர். அதிகாலை 3 மணிக்கு பங்களாவில் நுழைந்த அவர்கள், காலை 10.30 மணி வரை காத்திருந்து உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.

இதுபற்றி ஷாருக் கானின் மேலாளரான கல்லீன் டிசோசா போலீசாரிடம் கூறும்போது, பாதுகாவலர் என்னை தொடர்பு கொண்டு 2 பேர் பங்களாவுக்குள் நுழைந்தனர் என தெரிவித்தனர். அதன்பின்னரே எங்களுக்கு விவரம் தெரியும் என கூறி

எனினும், சதீஷ் என்ற வீட்டு பணியாள் இருவரையும் பார்த்து, அவர்களை அழைத்து வந்து உள்ளார். அந்நியர்களான அவர்கள் இருவரையும் பார்த்து நடிகர் ஷாருக் கான் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதன்பின் 2 பேரும் பாந்திரா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது.

அவர்கள் பதான் சாஹில் சலீம் கான் மற்றும் ராம் சரப் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். குஜராத்தின் பரூச் நகரை சேர்ந்த அவர்கள், நடிகர் ஷாருக் கானை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோம் என போலீசாரின் விசாரணையில் கூறி உள்ளனர்.

பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்தனர் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் ஷாருக் கான் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். டுங்கி என்ற பெயரிடப்பட்ட மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com