பாகுபலி- பொன்னியின் செல்வன் வித்தியாசம் என்ன...? மணிரத்னம் சொல்கிறார்

பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்களுடன் நடிகர்கள் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன் கண்டுகளித்தனர்.
பாகுபலி- பொன்னியின் செல்வன் வித்தியாசம் என்ன...? மணிரத்னம் சொல்கிறார்
Published on

சென்னை

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

சென்னையில், நடிகர்கள் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.

திரைப்படத்தை காண வடபழனியில் உள்ளபோர்ம் மாலுக்கு-க்கு வந்த அவர்களை பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் பெயர்களை சொல்லி அழைத்தனர்.

அவர்களை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் உள்ள சாந்தி திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார். முன்னதாக

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தஞ்சை மண்ணுக்கு என் மதிப்புக்குரிய வணக்கம். ராஜராஜ சோழனுக்கு வணக்கம். பொன்னின் செல்வன் திரைப்படத்தை இந்த தஞ்சை மண்ணில் பார்ப்பது பெருமையாக நினைக்கிறேன்.

1973 இல் மார்ச் 31ஆம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன். நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய் விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். எல்லா சினிமாவையும் வரவேற்பது என்னுடைய பழக்கம். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வன் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பது பெருமையாக பார்க்கிறேன்.

கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்து உள்ளார்கள். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி.

கல்கியின் எழுத்துக்கள் தான் முதல் வெற்றி. அடுத்தது மணிரத்தனம் இயக்கத்திற்கு. இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்ப்பதற்காக வரவில்லை, இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் 'ராஜராஜசோழன் தமிழகத்தின் மிகப்பெரிய மன்னர். அவரைப் பற்றி படம் எடுக்கும்போது நேர்மையான பதிவாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனால், பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக எதார்த்தமாக உருவாக்கப்பட்டது.

வந்தியத்தேவனின் பார்வையில் விரியும் இக்கதையில் முழுவதும் நம்பும்படியாக, கடந்த காலத்திற்குச் சென்றால் எப்படி இருக்குமோ அப்படி யதார்த்த பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. பாகுபலியைப்போல பெரிய பிரமாண்டங்களும் முழுச் சுதந்திரமும், பேண்டசிகளும் இதில் இல்லை. இவை, இரண்டும் வரலாற்றுப் படங்களாக இருந்தாலும் வேறுவேறானவை' எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com