’கைதி 2’-ன் நிலைமை என்ன? - கார்த்தி பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி.
சென்னை,
’கைதி 2’ எந்தநிலையில் இருக்கிறது என்ற அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் தற்போது திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் வா வாத்தியார். இந்நிலையில், திருச்சியில் தியேட்டர் விசிட் அடித்த கார்த்தி, பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜனை வைத்து படம் இயக்க போய்விட்டதால் கைதி 2-ன் நிலை என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அதை அவரே சொல்வார்” என முடித்து விட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில், இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. ஆனால், அது தள்ளிப் போய்கொண்டே இருந்தது.
பின்பு கடந்த டிசம்பரில் பணிகள் தொடங்கப்படும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியிருந்தார். ஆனால் தொடங்கப்படவில்லை. இப்போது எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. அதனால் கார்த்தியும் இப்படி சொல்லிவிட்டதால் லோகேஷ் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் கைதி பட ரசிகர்கள்.






