சினிமாவில் இருக்கவுங்க அரசியலுக்கு வந்தா என்ன தப்பு? எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி

இந்த படம் நிச்சயமாக யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருக்காது என்று எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருக்கவுங்க அரசியலுக்கு வந்தா என்ன தப்பு?  எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி
Published on

சென்னை,

நட்டி நடராஜ் நடிப்பில் தம்பி ராமையா கதை எழுதி உமாபதி ராமையா இயக்கியுள்ள படம் `டிஎன்2026'. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்சையானது. டீசரில் விஜய்போல தோற்றத்தில் நட்டி வருவதாகவும், விஜயின் அரசியல் வருகையை கேலிசெய்யும் விதத்திலும் இந்தப் படம் இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடந்தது. இதில் படத்தில் நடித்தவர்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். அதேபோல, நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கூறியதாவது; டிஎன்2026 என்பது அரசியல் படம். ஆனால் நிச்சயமாக யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருக்காது. எல்லோரும் மகிழ வேண்டும். சிரிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட படம். படத்தின் இயக்குநர் அருமையான திறமைசாலி. நட்டியுடன் எனக்கு இது முதல் படம். சதுரங்க வேட்டையில் இருந்தே நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர். விஜய்யுடனும் நான் நடித்து இருக்கிறேன்”என்றார். அந்த டீசரில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சினிமாவில் இருக்கவுங்க அரசியலுக்கு வந்தா என்ன தப்பு? என்று செய்தியாளர்களிடம் கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தம்பி ராமையா பேசுகையில், "எந்த ஒரு விஷயத்திலும் யார் மனதும் புண்படக்கூடாது என அடுத்தவர் இடத்திலிருந்து சிந்திக்கும் மெல்லிய மனதுக்கு சொந்தக்காரன் நான். அப்படி இருக்கக்கூடியவன் இந்தக் கதையை எழுதும்போது யார் மனதையும் சங்கடப்படுத்தக் கூடாது என நினைத்துதான் எழுதினேன். அதில் ஒரு குறிப்பிட்ட லுக்கை மட்டும் பார்த்துவிட்டு, தவறாக மாறிவிடுமோ எனப் பதறிவிட்டார்கள். என்னுடைய வயதுக்கு நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி பார்த்த பின்னர் இதற்கு நீங்களே தீர்ப்பு சொல்லுவீர்கள். 10ஆம் தேதி மக்களும் பார்த்துவிட்டு சொல்லுவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com