ஐஸ்வர்யா ராய்க்கு கையில் முறிவு ஏற்பட்டது எப்படி? - காரணம் வெளியானது

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடைபெற்றது.
What REALLY Happened To Aishwarya Rai's Arm? Here's Everything We Know About Her Fractured Hand
Published on

சென்னை,

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரத்யேக உடைகள் அணிந்து ஒய்யாரமாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த முறை ஐஸ்வர்யா ராய் கையில் மாவுக்கட்டு பேட்டிருந்தார்.

அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என்று கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தடுக்கி விழுந்துவிட்டாராம். இதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்துத்தான் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கான காஸ்டியூம் குறித்து முடிவு செய்யப்பட்டதாம். மேலும் கவனமாக இருக்கும் படியும், மேற்கொண்டு ஒரு காயம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளவேண்டாம் என்றும் டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com