கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தவறு? - மாளவிகா மேனன்

மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கேரளத்து தேசம் தந்த அழகிய நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், மலையாளம் தாண்டி தமிழில் 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா, நிழலா', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
படங்கள் தாண்டி, சமூக வலைதளங்களிலும் மிகவும் 'ஆக்டிவ்' ஆன பிரபலமான வலம் வரும் அவர், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''ஹோம்லியாக நடித்துவந்த நீங்கள், திடீரென கவர்ச்சி படங்களை வெளியிடுவது படவாய்ப்புகளை பிடிக்கவா? என்றெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. 'டிரெண்டு'க்கு ஏற்றபடி மாறியிருக்கிறேன். அவ்வளவுதான். இதில் தவறில்லையே என்றார்.
மேலும், மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களும் வராது. தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம். 'சோஷியல் மீடியா'வில் கொஞ்சம் 'ஆக்டிவ்' ஆக இருக்கிறேன். ரசிகர்களுக்காக கவர்ச்சி படங்களை வெளியிடுகிறேன். நான் மட்டுமா...', என்றார்.
தன்னை பற்றிய கிசுகிசுக்கள் குறித்து, ''சமூக வலைதளங்கள் இன்றைக்கு பெருகிவிட்டது. போலி ஐ.டி. கணக்குகள் உருவாக்கி முகம் காட்ட பயப்படும் நபர்கள், பிடிக்காதவர்களை பற்றி இஷ்டத்துக்கு அவதூறுகளை பரப்பி விடுகிறார்கள்.இதையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது'', என்றார்.






