'எஸ்.எஸ். ராஜமவுலியுடன் பணிபுரியாததற்கு அதுதான் காரணம்' - சிரஞ்சீவி


When Chiranjeevi revealed why he turned down to work with SS Rajamouli
x

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்காததற்கான காரணத்தை சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது விஸ்வம்பரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து, தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்திலும், அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்காததற்கான காரணத்தை சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

"ராஜமவுலி ஒரு படத்திற்கு 3-4 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார். அதனால், அவ்வளவு காலம் என்னால் ஒரே படத்தில் நடிக்க முடியமா என்று தெரியவில்லை. நான் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் 3-4 ஆண்டுகள் ஒரு படத்தில் பணிபுரிவது சாத்தியமில்லை. அதனால்தான் நான் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று சொன்னேன்" என்றார்.

1 More update

Next Story