'ஐதராபாத்தில் பாதியை வாங்கும் அளவுக்கு'...முதல் சம்பளம் குறித்து பகிர்ந்த நடிகர்

இவர் தனது சினிமா வாழ்க்கையை உதவி இயக்குனராக தொடங்கினார்.
When Hi Nanna Fame Nani Opened Up About His First Salary In Film Industry
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தமிழில் 'ஆஹா கல்யாணம்', 'வெப்பம்', 'நான் ஈ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது சினிமா வாழ்க்கையை உதவி இயக்குனராக தொடங்கினார்.

நானி இப்போது சினிமா துறையில் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும், அவரது பயணம் சவால்கள் மற்றும் விடாமுயற்சியால் நிரம்பியுள்ளது. முன்னதாக நானி, சினிமா துறையில் தான் பெற்ற முதல் சம்பளம் குறித்து பகிர்ந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறியதாவது,

'சினிமா துறையில் உதவி இயக்குனராக என் பயணம் தொடங்கியது. அப்போது நான் வாங்கிய முதல் சம்பளம் ரூ 4,000. அது எனக்கு 100 ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. அதனை நான் என் பாக்கெட்டில் வைத்து வீட்டிற்கு பைக்கில் சென்றேன். அப்போது நான் ஐதராபாத்தில் பாதியை வாங்கும் அளவுக்கு பணக்காரனாக உணர்ந்தேன்," என்று புன்னகையுடன் கூறினார்.

அதன்பிறகு தனது வாழ்க்கையில் அதிகம் சம்பாதித்த போதிலும், அந்த ரூ.4,000ஐ பெற்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எந்தப் பணமும் ஈடாகவில்லை என்று நானி கூறினார். தற்போது நானி தனது 31-வது படமான 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com