திருமணம் எப்போது? நடிகை அனுஷ்கா விளக்கம்

ஐதராபாத்தில் நடிகை அனுஷ்காவுக்கு நடந்த பாராட்டு விழாவில் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திருமணம் எப்போது? நடிகை அனுஷ்கா விளக்கம்
Published on

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவரது திருமணம் குறித்து தொடர்ந்து கிசு கிசுக்கள் வருகின்றன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது.

பின்னர் ஒரு தொழில் அதிபருடன் இணைத்து பேசினர். சில வாரங்களுக்கு முன்பு தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. இதனை அனுஷ்கா மறுத்தார். இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

பிரகாஷ் கோவலமுடிக்கு 44 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்தவர். அனுஷ்கா தற்போது சைலன்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆனதைதொடர்ந்து அவருக்கு சைலன்ஸ் படக்குழுவினர் ஐதராபாத்தில் பாராட்டு விழா நடத்தினர்.

இதில் தெலுங்கு நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனுஷ்கா கேக் வெட்டினார். அப்போது விழாவில் பங்கேற்ற நடிகை சார்மி, உங்கள் திருமணம் எப்போது? என்று அனுஷ்காவிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அனுஷ்கா, எனக்கு தெரியவில்லை. எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார். தொடர்ந்து சார்மியை பார்த்து உங்களுக்கு திருமணம் எப்போது? என்று அனுஷ்கா கேட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com