நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் எப்போது, என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Published on

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாகவும் நெருக்கமாகவும் இருக்கும் படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் தொடங்கிய இவர்கள் காதல் பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

நயன்தாராவுக்கு இது மூன்றாவது காதல். ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் மலர்ந்த காதல் முறிந்து போனது. எனவே இந்த காதலாவது நிலைக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கவலை. சமீபத்தில் இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி விட்டு வந்தனர். அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள்.

அந்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்த வருடத்தில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருடம் முடியபோகும் நிலையிலும் இன்னும் அதற்கான ஏற்பாடுகள் நடக்காததால் ஆதங்கத்தை வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவுக்கு 34 வயது பிறந்தது. திரையுலக பிரபலங்கள் வாழ்த்தினர்.

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் வீட்டை அலங்கரித்து கேக் வெட்ட வைத்தார். அந்த படத்தையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் வற்புறுத்தி வருகிறார்கள். நயன்தாரா வாழ்க்கையில் நிறைய கஷ்டம் அனுபவித்து விட்டார். அவரை கைவிட்டு விடாதீர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று விக்னேஷ் சிவனுக்கும் சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com