'பிச்சைக்காரன் 3' எப்போது? அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி

முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
'பிச்சைக்காரன் 3' எப்போது? அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2023-ம் ஆண்டு 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் வெளியானது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியகாவும் அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பிச்சைக்காரன் 3 படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், 'பிச்சைக்காரன் 3' குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "'பிச்சைக்காரன் 3' படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் 'பிச்கைக்காரன் 3' படம் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com