அஜித்துடன் படம் எப்போது? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

ரசிகர்கள் ‘கூலி’ திரைப்படத்தை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்துடன் படம் எப்போது? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் முதல்காட்சி 9 மணிக்கு தொடங்கியுள்ளது. கூலி படத்தை பார்க்க இயக்குனர் லோகேஷ், சாண்டி மாஸ்டர் மற்றும் நடிகர் சிவா ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்றனர். அவர்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

திரையரங்கில் படம் பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். கூலி படத்தின் ரெஸ்பான்ஸ் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. கைதட்டல்கள்தான் இதற்கான பதில் என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அஜித்துடன் எப்போது படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது படம் பண்ணுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. சுரேஷ் சந்திரா மூலமாக சில மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அவர் கார் ரேஸிலும் நான் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக நடக்கும். எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் வரும் பொழுது கண்டிப்பாக படத்தை இயக்குவேன். அவரை இயக்குவது என் ஆசைகளில் ஒன்று என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com