நடிகர் சங்க கட்டட திறப்பு விழா எப்போது? - நடிகர் விஷால் பேட்டி

ஆக.15ல் நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவுக்கு திட்டமிட்டுள்ளோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா எப்போது? - நடிகர் விஷால் பேட்டி
Published on

சென்னை,

பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. எனினும் சங்கத்துக்குள் நிலவிய பிரச்சினைகளால் 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.வங்கிக்கடன் கிடைக்காததால், நடிகர் நடிகைகள் பலர் நிதியுதவி வழங்கினர். இதன் மூலம் போதுமான தொகை திரட்டப்பட்டது.

இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்ட கட்டடப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர். திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சிக் கூடம், நடிப்புப் பயிற்சிப் பள்ளி எனப் பல்வேறு வசதிகளுடன் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் தயாராகி வருகிறது.

இந்தநிலையில்,சென்னையில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழா ஆக.15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் நடிகர் சங்க கட்டடம் திறப்புவிழா நடைபெறும். நடிகர் சங்க புதிய கட்டட பணிகள் ஜூலையில் நிறைவடையும். நீங்கள் அனைவரும் வர வேண்டும். வாழ்த்த வேண்டும். அதன்பிறகுதான் எனது திருமண விழா. அது உங்களுடைய கட்டிடம். நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரிக்காக கட்டப்பட்ட கட்டடம். அம்மாக்கள், பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நான் நிற்பேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com