

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம், சென்னை தியாகராயநகரில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் திறக்கப்பட்டால் தான், தனது திருமணம் என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால்.
இதனால் விஷால் -சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் முடிந்து, இருவருமே நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் திருமணம் செய்ய காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் சங்க கட்டிடம் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு, 'அடுத்த மாதம் (மார்ச்) திறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது' என்று விஷால் பதிலளித்தார்.
கட்டிடத்துக்கு யார் பெயர் சூட்டுவீர்கள்? என்ற கேள்விக்கு, 'உரிய நேரத்தில் அதுபற்றி பேசி முடிவு எடுப்போம். இப்போதைக்கு தென்னிந்திய நடிகர் சங்கமாகவே அது இருக்கிறது”, என்று பதிலளித்தார்.