நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
Published on

சென்னை, 

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங்,  யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com