நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ஹிட்லர்' படத்தின் வெளியீடு எப்போது ? வெளியான தகவல்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ஹிட்லர்' படத்தின் வெளியீடு எப்போது ? வெளியான தகவல்
Published on

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com