'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு எப்போது ? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்
'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு எப்போது ? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குநர் கார்த்திக்  சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும். முதற்கட்டமாக அந்தமானில் துவங்கும் படப்பிடிப்பில் சூர்யா 44 படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .

X

Daily Thanthi
www.dailythanthi.com