

சென்னை,
உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். அதனால் தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் ஹாலிவுட் படமான ‘தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தலைவர் 173 படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார். அதாவது, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தாய் கிழவி" திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தலைவர் 173 படத்திற்கான சூட்டிங்கை ஏப்ரல் மாத மத்தியில் தொடங்குவேன்" என்று தெரிவித்துள்ளார்.