விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்

ஜனநாயகன் மே 8ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்
Published on

சென்னை,

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளானது. தணிக்கை வாரிய மறுஆய்வுக்குழுவின் பரிசீலனையில் இருந்தபோதே, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, ஜனநாயகன் திரைப்படம் வரும் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மாலை முதலே ஜனநாயகன் மே 8ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், சென்சார் குழுவினர் நேற்று ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. எனினும், தற்போது வரை அது குறித்த தகவல் எதுவும் இல்லை. எனவே, சென்சார் சான்றிதழ் கிடைத்த பிறகே படக்குழு தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com