'அந்த தமிழ் படத்தில் நிராகரிக்கப்பட்டேன்...இதுதான் காரணம்' - பூஜா ஹெக்டே


When Pooja Hegde Was Deemed ‘Too Young’ For A Tamil Film Role
x
தினத்தந்தி 5 April 2025 8:24 AM IST (Updated: 5 April 2025 8:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் படம் ஒன்றிற்கு ஆடிஷன் சென்றதை பூஜா ஹெக்டே நினைவுகூர்ந்தார்.

சென்னை,

தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும், ரஜினி நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்திலும் நடிக்கிறார்.

இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ் படம் ஒன்றிற்கு ஆடிஷன் சென்றதை பூஜா ஹெக்டே நினைவுகூர்ந்தார். அவர் கூறுகையில்,

'சமீபத்தில் நான் ஒரு தமிழ் படத்திற்கு ஆடிஷன் சென்றிருந்தேன், ஆனால் நிராகரிக்கப்பட்டேன். நான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் இளமையாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள், அதனால் வயதில் மூத்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் நான் அதற்கு வெட்கப்படவில்லை, எப்போதும் ஆடிஷன்களுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

ஈகோ உங்கள் திறமையில் தலையிட அனுமதிக்காதீர்கள். பலருக்கு ஆடிஷனுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்காது, எனவே வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில பெரிய நட்சத்திரங்கள் இன்னும் ஆடிஷன் செல்கிறார்கள்' என்றார்.

1 More update

Next Story