திருமணம் எப்போது? சுருதிஹாசன் விளக்கம்

திருமணம் எப்போது? சுருதிஹாசன் விளக்கம்.
திருமணம் எப்போது? சுருதிஹாசன் விளக்கம்
Published on

நடிகை சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

கமல்ஹாசன் மகள் என்று சொல்வது மகிழ்ச்சி. ஆனால் நானும் ஒரு சாதாரண பெண்தான். எல்லாவற்றுக்கும் அவரையே சார்ந்து இருப்பது எனக்கு பிடிக்காது. அதனால் முதல் படத்துக்கு பிறகு எப்போதும் எனது அப்பாவிடம் பணம் வேண்டும் என்று நான் கேட்பதே இல்லை. செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நான் சம்பாதித்ததுதான். அவரிடம் இருந்து அன்பு, தைரியம், கருணை இதை மட்டும்தான் எனது சொத்துகளாக நான் கொண்டு வந்து இருக்கிறேன். எனது வாழ்க்கையில் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். 100 சதவீதம் எனக்கு பிடித்தமாதிரி சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். தொழில் ரீதியாக அப்பாவிடம் எப்போதும் உதவி கேட்டது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அனுபவித்து தொழிலை நேசித்து செய்கிறேன். 12 ஆண்டு சினிமா வாழ்க்கையில் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. எனக்கு அதிரடி படங்கள் பிடிக்கும். கனவு கதாபாத்திரம் இல்லை. ஆனால் இசை கலைஞராக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் சகஜம். திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது அந்த எண்ணம் இல்லை

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com