நயன்தாராவுடன் திருமணம் எப்போது ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில்

நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பதை தெரிவித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவுடன் திருமணம் எப்போது ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில்
Published on

சென்னை

விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும்போதிலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதிலிருந்து, இந்த காதல் ஜோடிகளின் திருமணம் எப்போது? என்பதுதான் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

நயன்தாரா இவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டிலும், சினிமாவிலும் முதலீடு செய்து வருகிறார்.

அவரும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த பட நிறுவனம் படங்கள் தயாரிப்பதுடன், மற்றவர்கள் படங்களை வாங்கி வெளியிடுகிறது.

இந்த நிலையில், நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களுடன் கேள்வி, பதில் மூலம் உரையாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பதை தெரிவித்திருக்கிறார். ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் புரோ. பணம் கொஞ்சம் சேர்த்துவிட்டுத்தான் திருமணம் செய்வோம். கொரோனா முடிஞ்சவுடன் கல்யாணம் நடத்திடலாம் என பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com