'கடைசி நபர் நீங்கள் அல்ல.... நான் வந்து கொண்டிருக்கிறேன்' - ஷாருக்கானின் கருத்துக்கு விஜய் தேவரகொண்டா பதில்


When Vijay Deverakonda remarked Shah Rukh Khan is not the last of the stars, Youre incorrect
x

ஷாருக்கானை நேரில் சந்தித்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? என்ற கேள்விக்கு விஜய் தேவரகொண்டா பதிலளித்தார்.

சென்னை,

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷாருக்கானிடம், வேறு யாராவது உங்களை திரைத்துறையில் வெற்றி காண்பார்கள் என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், 'இல்லை, அது நடக்காது. நான்தான் கடைசி நட்சத்திரம்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், ஷாருக்கானின் இந்த கருத்து தவறு என்று விஜய் தேவரகொண்டா கூறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் அவர் அதை கூறினார். அப்போது, ஷாருக்கானை நேரில் சந்தித்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்டதற்கு விஜய் தேவரகொண்டா, 'தன்னை 'கடைசி நட்சத்திரம்' என்று கூறிய கருத்து தவறு என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கடைசி நட்சத்திரம் இல்லை. நான் வந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "ஷாருக்கான் பெற்ற வெற்றி எனக்கு எவ்வளவு உத்வேகமாக இருந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. அவரால் அதை செய்ய முடிந்தது என்றால், ஏன் என்னால் முடியாது?' என்றார்.

1 More update

Next Story