அனிருத்துக்கு திருமணம் எப்போது?.. சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய பதில்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் அனிருத்தின் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
அனிருத்துக்கு திருமணம் எப்போது?.. சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய பதில்
Published on

சென்னை,

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். இப்போது அவர் மதராஸி, ஜனநாயகன், ஜெயிலர் 2 என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுவது வழக்கம். குறிப்பாக அவரது திருமணம் குறித்து அடிக்கடி கிசுகிசுக்கப்படும். சமீபத்தில் கூட முக்கிய பிரபலம் ஒருவருடன் இணைத்து அனிருத் கிசுகிசுக்கப்பட்டார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயனிடம், உங்கள் நண்பர் அனிருத்துக்கு எப்போதுதான் திருமணம் ஆகும்?' என்று கேட்கப்பட்டது.

இதற்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கும்போது, பொதுவாக இரவு 8 மணிக்கு மேல் திருமணம் ஆனவர்களுக்கு எங்கே இருக்கீங்க? என வீட்டிலிருந்து அழைப்பு வரும். ஆனால் அனிருத் தூங்கி எழுவதே இரவு 8 மணிக்கு தான். திருமணமா? ஹிட் பாடல்களா? என்று வரும்போது அவருக்கு ஹிட் பாடல்கள் தான் முக்கியம். மற்றபடி முடிவு அவர் கையில் என்றார். சிவகார்த்திகேயன் கூறுவதை பார்த்தால் அனிருத் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று தான் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com