'கேஜிஎப் 3' எப்போது தொடங்கும்? பிரஷாந்த் நீல் சொன்ன பதில்

இயக்குனர் பிரஷாந்த் நீல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் 'கேஜிஎப் 3' குறித்த பேசியுள்ளார்.
'கேஜிஎப் 3' எப்போது தொடங்கும்? பிரஷாந்த் நீல் சொன்ன பதில்
Published on

கன்னட திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களான கேஜிஎப் சாப்டர் 1 மற்றும் கேஜிஎப் சாப்டர் 2, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்துப் வெளியானவை. இந்த இரண்டு படங்களும் இந்தியாவைத் தாண்டி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தன. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், கேஜிஎப் சாப்டர் 3 குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் சூழலில், இயக்குனர் பிரஷாந்த் நீல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கேஜிஎப் 3 குறித்த பேசியுள்ளார். அதாவது, டிராகன் படத்தை முடித்த உடனே அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சலார்-2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்

தற்போது நான் மட்டுமின்றி யாஷ்ம் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால், கேஜிஎப்-3 படத்தை தொடங்குவதற்கு அதிக கால அவகாசம் எடுக்கும். கேஜிஎப்- 3 படத்தை குறித்து நாங்கள் யோசிப்பதற்கே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பிரஷாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆர்.-யை வைத்து ‘டிராகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com