சூர்யா நடித்துள்ள “ கருப்பு’ படம் எப்போது ரிலீஸ்? ஆர்.ஜே பாலாஜி கொடுத்த புதிய அப்டேட்

எப்போ வந்தாலும் கருப்பு படம் உங்க எல்லாருக்கும் பிடித்த மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஆர்.ஜே. பாலாஜி கூறினார்.
சூர்யா நடித்துள்ள “ கருப்பு’ படம் எப்போது ரிலீஸ்? ஆர்.ஜே பாலாஜி கொடுத்த புதிய அப்டேட்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி கூறியதாவது: அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இன்னைக்கு பொங்கல் வாழ்த்து என்று போஸ்டர் எதுவும் வராது. கருப்பு படத்தின் 2-வது பாடலுடன் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளிவரும். எப்போ வந்தாலும் கருப்பு படம் உங்க எல்லாருக்கும் பிடித்த மாதிரியாகத்தான் இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com