சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்

சூர்யாவின் கருப்பு படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது.
சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com