

சென்னை,
‘பாக்கெட் நாவல்’ படத்தின் முதல் பாடலான ‘ஆச அத்தான்’ (Aasa Aththan) டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் முதல் பாடலான ‘ஆச அத்தான்’ (Aasa Aththan) டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாடலில் இடம்பெறும் நட்சத்திரம் யார் என்பதை ரசிகர்கள் யூகிக்கும்படியான பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதனால், பாடலில் இடம்பெறப்போகும் அந்த நட்சத்திரம் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.