'அதையே ஒழிக்க முடியாதபோது எப்படி கள்ளச்சாராயத்தை...' - நடிகர் ரஞ்சித்

நடிகர் ரஞ்சித் 'கவுண்டம்பாளையம்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
'அதையே ஒழிக்க முடியாதபோது எப்படி கள்ளச்சாராயத்தை...' - நடிகர் ரஞ்சித்
Published on

கோவை,

நடிகர் ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் ரஞ்சித் 'கவுண்டம்பாளையம்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில், கோவை கோனியம்மன் கோவிலில் நடிகர் ரஞ்சித் மற்றும் படக் குழுவினர் படத்தின் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என சொல்லி நெல்லையில் கொடுமை நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும்.

சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்க வேண்டும். அதன்பிறகு மற்ற பெண்களை சுயமரியாதை திருமணம் செய்ய சொல்ல வேண்டும். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாதபோது எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிப்பார்கள். இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com