என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!

நீண்ட நாள் கழித்து சூர்யாவுக்கு வெற்றிப்படம் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!
Published on

சென்னை,

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இன்றுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது.

இதனால், இப்படம் விரைவாக ரூ. 100 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் கழித்து சூர்யாவுக்கு வெற்றிப்படம் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி, சூர்யாவின் பெயரைக் குறிப்பிடாமல், 'கருப்பா... இதுக்கு மேல என்ன வேண்டும்?" என படத்தைப் பாராட்டியிருந்தார். ஆனால், அப்பதிவில் ஆர்ஜே பாலாஜி, சாய் அபயங்கர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது, அப்பதிவைப் பகிர்ந்த நடிகர் சூர்யா, "என் பெயர் எங்கப்பா?" எனக் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். மேலும், சூர்யாவின் கேள்விக்கு ஆர்ஜே பாலாஜி, "கருப்பான்னு யாரைச் சொல்லியிருக்கார் சார்?" என பதிலளித்துள்ளார். ரசிகர்கள் இப்பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com