"சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ...சிறந்த பாடகர் விருது கிடைக்கும்" - விஷால்


சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ...சிறந்த பாடகர் விருது கிடைக்கும் - விஷால்
x

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் நடித்துள்ள மதகஜராஜா படம் வருகிற 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'. இந்த படத்தில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். 'மதகஜராஜா' 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சென்னையில் நேற்று பிரி ரீலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், சுந்தர் சி, குஷ்பு, படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசினார். விஷாலிடம் அவர் பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார்.

நடிகர் விஷால் மேடையில் படம் குறித்து பேசினார். அதில், "இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்" என்று நகைச்சுவையாக கூறினார். அதாவது, விஜய் ஆண்டனியின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மை டியர் லவ்வரு' என்ற பாடலை விஷால் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பிரி ரீலிஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலுடன் கலந்து கொண்டார். காய்ச்சலுடன் வந்ததால் அவருக்கு கைகள் நடுக்கம் மற்றும் குரலில் பதற்றத்துடன் காணப்பட்டார்.

1 More update

Next Story