அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!


அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!
x

நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆண்டு வருமானத்துக்கேற்ப வரி செலுத்துவது கடமையாகும். குறிப்பாக திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்கள் கோடிக்கணக்கில் தங்கள் வரியைச் செலுத்துவார்கள்.

அந்தவகையில் நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய திரையுலக பிரபலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.92 கோடியளவில் வருமான வரி செலுத்தியுள்ளார். 2-வது இடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உள்ளார். அவர் இந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.

3-வது முதல் 10-வது இடங்களில் முறையே சல்மான்கான் (ரூ.75 கோடி), அமிதாப் பச்சன் (ரூ.71 கோடி), அஜய் தேவ்கன் (ரூ.42 கோடி), ஹிருத்திக் ரோஷன் (ரூ.42 கோடி), ரன்பீர் கபூர் (ரூ.36 கோடி), கபில் ஷர்மா (ரூ.26 கோடி), கரீனா கபூர் (ரூ.20 கோடி), ஷாஹித் கபூர் (ரூ.14 கோடி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

1 More update

Next Story