எந்த படத்துக்கு ஆஸ்கர்?...போட்டியில் தனுஷ், அல்லு அர்ஜுன்

2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ''ஹோம்பவுண்ட்' திரைப்படம் தேர்வாகி உள்ளது.
Which film will win the Oscar?... Dhanush, Allu Arjun in the race
Published on

சென்னை,

ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் இந்திய படங்களின் பட்டியலில் தனுஷின் குபேரா, அல்லு அர்ஜுனின் புஷ்பா2 உள்ளிட்ட படங்கள் இடம் பிடித்தன.

ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் இந்திய படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆஸ்கர் விருதுகளுக்கு பல்வேறு மொழிகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன.

இந்திய திரைப்பட கூட்டமைப்பு சமீபத்தில் பட்டியலை வெளியிட்டது. இதில் அல்லூ அர்ஜுனின் புஷ்பா 2, விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, தனுஷின் குபேரா, சுகிருதி வேணி நடித்த காந்தி தாத்தா செட்டு, வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம், கன்னடத்தில் இருந்து வீர சந்திரஹாசா, இந்தியில் இருந்து ஹோம்பவுண்ட், கேசரி 2, தி பெங்கால் பைல்ஸ், புலே படமும் ஆஸ்கர் போட்டியில் இருந்தன.

இருப்பினும், 2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ''ஹோம்பவுண்ட்' திரைப்படம் தேர்வாகி உள்ளது. தற்போது 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் ஒரு இந்தியத் திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதை பொருத்திருந்து பார்போம். 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com