

சென்னை,
“போக்கிரி 2’ போன்ற மாஸ் ஆக்ஷன் படமா? அல்லது ‘சச்சின் 2’ போன்ற காதல் கதையா? விஜய் நடித்த எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “பத்ரி 2’ செய்ய விரும்புகிறேன். அந்தப் படத்தில் ஒரு சிக்மா உணர்வு இருக்கிறது” என்று ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
தற்போது ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளில் ஜேசன் சஞ்சய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “போக்கிரி 2’ போன்ற மாஸ் ஆக்ஷன் படமா? அல்லது ‘சச்சின் 2’ போன்ற காதல் கதையா? விஜய் நடித்த எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறீர்கள்?” என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “பத்ரி 2’ செய்ய விரும்புகிறேன். அந்தப் படத்தில் ஒரு சிக்மா உணர்வு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சிறுவயது நினைவுகள் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “சின்ன வயசுல அப்பாவுடன் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். ‘போக்கிரி’ படம் எப்போதுமே நினைவில் இருக்கும். அப்போது ஒரு பக்கம் அப்பா படம், இன்னொரு பக்கம் அஜித் சார் படம்... பயங்கரமாக இருந்துச்சு” என்று தெரிவித்துள்ளார்.