பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் யார்? துல்கர் சல்மான் பேச்சு

துல்கர் சல்மானின் ‘ஏஒடி’ படம் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் யார்? துல்கர் சல்மான் பேச்சு
Published on: 

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நேர்காணல் ஒன்றில், “பெண்களின் சுதந்திரத்தில் தலையிடவோ அவர்களுக்கு அனுமதி அளிக்கவோ நாம் யார்?” எனக் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி' படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரது நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார்.

பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் நடிகை சாத்விகா வீரவள்ளி நாயகியாக அசத்தியுள்ளார். இந்தப் படத்தில் சுருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தில் நாயகி சமூகக் கட்டமைப்புகளைக் கடந்து தனது கனவை நிறைவேற்ற நாயகன் துல்கர் சல்மான் உதவுவார்.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.45 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றி விழாவும் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்ற துல்கர் சல்மான் பெண் சுதந்திரம் குறித்து பேசியுள்ளார்.

யாருக்கும் உரிமை இல்லை

மற்றொருவரைக் கட்டுப்படுத்த நாம் யார் என்றும், அது அவர்களின் வாழ்க்கை என்றும் துல்கர் சல்மான் குறிப்பிட்டார். கணவன், சகோதரர் அல்லது தந்தை என யாராக இருந்தாலும், பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவோ, எதற்கும் அனுமதி வழங்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்று துல்கர் சல்மான் வலியுறுத்தினார்.

தாம் நடித்துள்ள கிருஷ்ணா என்ற கதாபாத்திரம், ‘படிப்பை நிறுத்தச் சொல்லி நான் ஒருபோதும் அவளிடம் சொன்னதில்லை’ என்று கூறும் வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஆகாசம்லோ ஒக தாரா’ கதைக்களம்

சமூகம் விதித்த எல்லைகளை உடைத்துத் தமது கனவுகளை நோக்கிப் பயணிக்கும் இளம் பெண்ணின் கதையை ‘ஆகாசம்லோ ஒக தாரா’ முன்வைக்கிறது. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கல்பனா என்ற கதாபாத்திரத்துக்கும், அவளது லட்சியங்களுக்குத் துணையாக நிற்கும் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்துக்கும் இடையிலான கதையாக இது உருவாகியுள்ளது.

கிருஷ்ணாவாக துல்கர் சல்மான் நடித்துள்ள நிலையில், அறிமுக நடிகை சாத்விகா வீராவல்லி கல்பனாவாக நடித்துள்ளார். காதல், உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் சுவாரசியமான அம்சங்களுடன் இப்படம் அமைந்துள்ளது.

X