

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை திரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார். காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து விஜய் இப்படி செய்தது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பாலா உள்பட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி நடிகர் விஜய்யின் செயலைக் குறிப்பிட்டு, ”இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையை கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது என புலம்புகிறார்கள்” என விஜய்யின் செயலை விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சமுத்திரக்கனி ஆதங்கத்தோடு பேசுகையில் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பாலா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.
மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு விஜய் “மகளிர் தின விழா” கொண்டாடுவதாக இயக்குநர் அமீர் தாக்கியிருந்தார். இப்படி சினிமா வட்டாரத்திலேயே நடிகர் விஜய்யின் நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
“என் சொந்த விஷயங்களுக்காக ரசிகர்கள் வருந்த வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என் சொந்த பிரச்சனைகள் கவலைப்படும் அளவுக்கு அவை ஒன்றும் தகுதியானது இல்லை” என்று மகளிர் தின விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பரப்பப்படும் வதந்திகளுக்கு விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.